கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

 
1 1

கோவை மக்களின் பொழுதுபோக்கு தலமாக விளங்க உள்ள செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் .

இதற்காக அவர் இன்று காலை 10.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு 11.15 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வந்தார் . கோவை விமான நிலையத்துக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர் .

வரவேற்பு முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் 11.45 மணிக்கு காந்திபுரம் வந்தார். பின்னர் செம்மொழி பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் . தொடர்ந்து செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர்தோட்டம், ஆரோக்கிய வனம், நீர்வனம், பாறை வனம், பூஞ்சோலை, மலைக்குன்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் பார்வையிட்டார் . பின்னர் அங்கு உள்ள நீர்வீழ்ச்சி அரங்கில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார் .