அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!
Feb 3, 2026, 09:16 IST1770090369985
அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


