தேசிய விவசாயிகள் தினம் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

 
stalin

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

agri
தேசிய உழவர் நாள் (Indian Farmer's Day) உழவர்களின் நலனுக்காகவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 23-ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங் அவர்களின் பிறந்த நாளே தேசிய உழவர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே உழவர்களின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதைப் போன்றே அவர் ஆட்சியின் போது உழவர்களின் நலன்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டுவந்தார்.

agri

இந்நிலையில்  முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனும் அளவில் உலகை உய்விக்கும் உயர்குடியாம் உழவர்கள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்!


பெருமழையால் பயிர்களையும் கால்நடைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உழவர்களுக்கு உறுதுணையாக நமது அரசு நின்று காக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.