நீரஜ் சோப்ராவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 
stalin stalin

நீரஜ் சோப்ராவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

neeraj-chopra-344

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில்   கடந்த 9 நாட்களாக  நடைபெற்று வந்த நிலையில் இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள் உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர். இதில்  இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சரித்திரம் படைத்து இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்!  உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்காக முதல் தங்கத்தை வென்றதிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அற்புதமான சாதனைகள் இந்திய விளையாட்டுகளை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.