திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு
Jun 7, 2025, 14:28 IST1749286724563
பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டு, பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் கூறும் குறைகளை கேட்டு, பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீதம் புது வாக்காளர்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பொதுமக்களிடம் நமது திட்டங்களை பொறுமையாக விளக்கி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். 30 சதவீதம் புது வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்” என்றார்.


