பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
tn

ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு பணி வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர் .சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

tn

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விசாரித்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அத்துடன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?

பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 

2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். " என்று பதிவிட்டுள்ளார்.