"முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்" - ஈபிஎஸ்
விழுப்புரம் கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுபேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இதை பலர் அருந்தியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து 16ற்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் உள்ளிட்ட 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறவுள்ளார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். விழுப்புரம் கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுபேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் . நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன் என்றார்.