"உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தற்போது நலமுடன் உள்ளார்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

 
masu

உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் தற்போது நலமுடன் உள்ளார் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

masu

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,  உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தற்போது நலமுடன் உள்ளார். ஃப்ளு வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது . முதலமைச்சருக்கு வந்திருப்பது மழை காலங்களில் வரும்.
வைரஸ் காய்ச்சல் தான்; தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். விரைவில் முழுமையாக குணமடைவார் என்றார்.

 stalin

தொடர்ந்து பேசிய அவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கர்ப்பிணி உதவித்தொகை விநியோகம் மீண்டும் துவங்கியது. 2018ம் ஆண்டு முதல் விடுபட்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ரூ. 18,000 வழங்கப்படும். கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.18,000 இனி 3 தவணைகளாக வழங்கப்படும். கர்ப்பிணி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.