கொரோனா தலைதூக்க தொடங்கியுள்ளது: தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
stalin

தஞ்சையில் ரூ.894 கோடி மதிப்பிலான 133 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தஞ்சையில் ரூ.98.77 கோடி மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தஞ்சை சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில், 45 ஆயிரம் பயனாளிகளுக்கு 248 கோடியே 45 ஆயிரம் ரூபாய் செலவிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

cm

இதை தொடர்ந்து தஞ்சையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  "காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான். இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் 6 மாதத்தில் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்" என்றார்.

cm stalin

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் தற்போது ஆங்காங்கேகொரோனா தொற்று பரவல்  தலைதூக்க தொடங்கிவிட்டது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றியே  அரசு நிகழ்ச்சிகள்  நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.  சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் இந்த நிலையில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு  ஒருசில நாளில் வீடு தேடி நலத்திட்ட உதவிகள் வரும் " என்றார்.