ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

 
ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

 "கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

 ‘கள ஆய்வில் முதல்வர்’திட்டத்தின் கீழ் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக  நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  அந்தவகையில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை)  2 நாட்களுக்கு  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.  இதற்காக  இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பபட்ட அவர், விழுப்புரம் செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.  மேலும் தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்து வரும் அவர், மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் கலந்துரையாடுகிறார்.  தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.