ஜூன் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு!

 
cm stalin

டெல்டா மாவட்டங்களில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

mk stalin

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வருகிற 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நெல் பாசனத்திற்காகவும்,  விவசாயிகளின் நலனை காக்கவும் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு, குறு வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம் சேலம் ,நாமக்கல், ஈரோடு ,கரூர்,திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளை  நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

mettur

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9ம் தேதி முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.  பாசனத்துக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்பட உள்ள நிலையில் தஞ்சை, திருவாரூர் ,நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்குகிறது. இதன் காரணமாக முன்கூட்டியே டெல்டா மாவட்டங்களில் முதல்வர்  ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.