தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய முதல்வர்கள்..

 
 முதலமைச்சர்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “அன்பான தோழர் மு.க.ஸ்டாலின்  அவர்களுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். கேரளா-தமிழ்நாடு உறவை  வலுப்படுத்த நீங்கள் எடுத்த  முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் நம்முடைய தாய்மொழிகளின் பாதுகாப்பில் உறுதியாக நின்று, நீங்கள் நாடு முழுவதும் அனைவரது  இதயங்களையும்  வென்றுள்ளீர்கள்.  இந்த சிறப்பான நாள் உங்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றியை கொடுக்க விரும்புகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.  

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய முதல்வர்கள்..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட நாள் ஆரோக்கியமான ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. கடைசியாக என்ன சொல்லியிருக்கார் தெரியுமா??..

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், “தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். . மாண்புமிகு முதல்வர் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

சந்திர சேகர ராவ், மு.க.ஸ்டாலின்

ஆந்திரமாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றி கிடைக்க விரும்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டி