தடுப்புச் சுவர் இல்லாத கிணறுகளை கணக்கெடுக்க உத்தரவு - தலைமைச் செயலர்

 
,ல் ,ல்

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து சாலை ஓரங்களில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.


சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து சாலை ஓரங்களில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளை ஆய்வு ஓரத்தில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

இதன்பிறகு சாலையின் ஓரத்தில் உள்ள மூடவும், அது தொடர்பான வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் பள்ளம் உள்ளது அல்லது கிணறு உள்ளிட்ட என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். ஆய்வு செய்த பிறகு, தற்காலிகமாக இது போன்ற கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் அந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். இதன்பிறகு, நிரந்தரமாக கிணறுகளை மூடும் வகையில் அவற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.