சிறுவன் கடத்தல் வழக்கு - ஏடிஜிபி ஜெயராம் கைது
சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிபதி உத்தரவை அடுத்து ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் தாமோதரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஏடிஜிபி ஜெயராமனின் வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதனையடுத்து, ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சிறுவன் கடத்தல் வழக்கில் நீதிபதி உத்தரவை அடுத்து ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து சிறையில் அடைக்க
நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.


