வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் கை குழந்தை மீட்பு

 
வெள்ளத்தில் சிக்கிய ஆட்டோவில் கை குழந்தை மீட்பு

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் இரவு நேரத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கன மழை இடி மின்னலுடன் கொட்டி தீர்த்தது. இந்த மழையால் புதுக்கோட்டையே வெள்ளக்காடாக மாறியது.

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் இடையப்பட்டி பகுதியில் இருந்து வந்த காட்டாற்று நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றது.  இதேபோல் வடக்கு நான்காம் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் அவளியாகச் சென்ற ஆட்டோ மாட்டிக்கொண்டதில் ஆட்டோவில் பயணித்த கைக்குழந்தை உள்ளிட்ட பெண்களை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் வரத்து வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் புதுக்கோட்டை மச்சுவாடி ஜீவா நகர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கு குடியிருக்க கூடிய‌ பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதனை எடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் வரத்து கால்வாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல்தான் காமராஜபுரம் பகுதியிலும் வெள்ள நீர் பல வீடுகளில் உட்பகுத நிலையில் காமராஜபுரம் 21ம் வீதியில் உள்ள இரண்டு வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ததால் எடிந்த வீட்டில் இரவு நேரத்தில் உறங்க கூட முடியாமல் அங்கு வசிக்கக்கூடிய நபர்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்தனர்.