‘குழந்தைகள் பத்திரம்’.. ‘என் சாவுக்கு காரணம் .... தான்’ என கலெக்டருக்கு லெட்டர்.. சத்துணவு அமைப்பாளரின் அதிர்ச்சி முடிவு..

 
‘என் சாவுக்கு காரணம் பி.டி.ஓ. தான்’ கலெக்டருக்கு லெட்டர் எழுதி வைத்துவிட்டு சத்துணவு அமைப்பாளர் தற்கொலை..!! ‘என் சாவுக்கு காரணம் பி.டி.ஓ. தான்’ கலெக்டருக்கு லெட்டர் எழுதி வைத்துவிட்டு சத்துணவு அமைப்பாளர் தற்கொலை..!!

தன் சாவுக்கு பி.டி.ஓ தான் காரணம் என கடிதம் எழுதிவைத்துவிட்டு சத்துணவு அமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மனைவி பாரிஜாதம் (வயது 57).    இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாரிஜாதம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதியுதவி பள்ளியில்  சத்துணவு அமைப்பாளராக  பணியாற்றி வந்த நிலையில்,   பாரிஜாதத்தை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்ததாக  தெரிகிறது.  இது குறித்து குடியாத்தம் (பி.டி.ஓ) BDO மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பாரிஜாதம் கேள்வி  கேட்டுள்ளார்.  அதற்கு  அதிகாரிகள்  கடுமையாக பேசி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.  இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக  தெரிவிக்கின்றனர்.  

‘என் சாவுக்கு காரணம் பி.டி.ஓ. தான்’ கலெக்டருக்கு லெட்டர் எழுதி வைத்துவிட்டு சத்துணவு அமைப்பாளர் தற்கொலை..!!

இந்தநிலையில் மன உளைச்சலில் இருந்த பாரிஜாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து குடியாத்தம்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தகவலை பேரில் விரைந்து வந்த போலீசார் பாரிஜாதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மன உளைச்சலில் இருந்த வந்த சத்துணவு அமைப்பாளர் பாரிஜாதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரியும், எனது மரணத்திற்கு காரணம் BDOஆபீஸ் தான் என்றும், BDO மற்றும்  BDO மேனேஜர் சுந்தரேசன் ,  மேகலா மற்றும் சத்துணவு அமைப்பாளர் மகாலட்சுமி உள்ளிட்டோர் தான் எனக்குறிப்பிட்டு ,  குற்றம்சாட்டி இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார்.  கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

‘என் சாவுக்கு காரணம் பி.டி.ஓ. தான்’ கலெக்டருக்கு லெட்டர் எழுதி வைத்துவிட்டு சத்துணவு அமைப்பாளர் தற்கொலை..!!