மறைந்த சோ ராமசாமியின் மனைவி காலமானார்..
Aug 20, 2024, 12:58 IST1724138895230
மறைந்த நடிகரும் துக்ளக் ஆசிரியருமான சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார்.
பிரபல அரசியல் விமர்சகராகவும், துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்த சோ ராமசாமி கடந்த 2016ம் ஆண்டு காலமானர். இதன்பின்னர் அவருடைய மனைவி சௌந்தரா ராமசாமி, குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சௌந்தரா ராமசாமி நேற்றிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சோ ராமசாமி - சௌந்தரா ராமசாமி தம்பதிக்கு ஸ்ரீராம் என்கிற மகனும், சிந்துஜா என்கிற மகளும் உள்ளனர். நாளை முற்பகலில் சௌந்தரா அம்மையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் சௌந்தர அம்மையாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.