‘சோழ சாம்ராஜ்ஜியம் நாட்டின் பொற்காலம்..’ சோழ நாணயத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேச்சு..!!

 
PM Modi PM Modi

சோழ சாம்ராஜ்ஜியம்  பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.  

தமிழகத்தில் வருகை தந்துள்ள பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழப்புரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டார்.  அப்போது இசைஞானி இளையராஜாவின்  இசை நிகழ்ச்சியையும் மனமுருகி ரசித்தார். தொடர்ந்து ராஜேந்திர சோழனின் 1005வது பிறந்தநாளையிட்டி அவரது  நினைவு நாணயத்தையும் வெளியிட்டார்.  பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “வணக்கம் சோழ மண்டலம். சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆன்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது. பாரத நாட்டின் 140 கோடி மக்களின் வளர்ச்சிக்காக எனது வேண்டுதலை சிவனிடம் வைத்தேன்.  1000 ஆண்டுகள் நிறைவுசெய்த பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த பெரும் பேறு எனக்கு கிடைத்திருக்கிறது. கங்கை கொண்ட சோழப்புரம் குறித்த கண்காட்சியை கண்டு வியந்தேன்.  

Image

சோழ மன்னர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு  தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது.  சோழர்களின் சாதனைகள் இந்தியவின் பலத்திற்கு எடுத்துக்காட்டு. ராஜராஜன், ராஜேந்திர சோழன் இரு பெயர்களும் பாரதத்தின் அடையாளங்கள்.  பிரிட்டனுக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழராட்சி. ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தது.  நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கை கொண்ட சோழப்புரம். பண்பாட்டால் நாட்டி ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்றாகும். 

Image

இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்திக் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாச்சாரத்தோடு இணைந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது.  சைவ பாரம்பரியத்தில் தமிழ்நாடு முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம். சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை, அன்பே சிவம் என்பது எவ்வளவு தொலைநோக்கான பார்வை.  திருமூலரின் ‘அன்பே சிவம் என்கிற வழியில் தான் இன்றைய இந்தியா பயணிக்கிறது. களவாடப்பட்ட கலைச் சின்னங்களை மீட்டுள்ளோம்.. இதில் 36 தமிழகத்தைச் சேர்ந்தவை.  

ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் சக்திவாய்ந்த கடற்படையை வளர்த்தெடுத்தார்கள். சக்திவாய்ந்த  அந்த கடற்படையை விரிவுபடுத்தியது ராஜேந்திரன். நாட்டின் வலிமையை ஆபரேஷன் சிந்தூ வெளிப்படுத்தியது. இதனை நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். புதிய இந்தியாவுக்கு சோழ சாம்ராஜ்ஜியம் வரைபடம் தருகிறது.   தமிழகத்தில் ராஜராஜனுக்கும்,  ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும்.” என்று அவர் பேசினார்.