பிறந்தநாளில் நல்ல செய்தியை தெரிவித்த இளையராஜா - திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் நன்றி!!

 
tn

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்று தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இசைத்துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இளையராஜா , ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ள  இளையராஜாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும்,  திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

ilaiyaraj-a3

இந்நிலையில் இசைஞானி இளையராஜா பிறந்தநாளையொட்டி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம்  வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுக்குறித்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், "இன்று பெருமதிப்பிற்குரிய இளையராஜா அண்ணா அவர்களை சந்தித்தோம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்னாரிடம் ஆசிகளை பெற்றோம்.இந்த தருணத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் நல்ல செய்தியை அவர் தெரிவித்தார்.திரைப்பட இசை கலைஞர்கள் சங்க கட்டிடத்தை புதுப்பித்து தருவதாக இரண்டு வருடத்திற்கு முன்பு அறிவித்தார்.

tn

ஆனால் கொரோனா காரணத்தினால் இரண்டு வருடம் வேலை துவங்க முடியாமல் தடைபட்டது எனவே இன்று அவர் பிறந்தநாளில் சங்க கட்டிட வேலையை துவங்குமாறு சம்மதம் தெரிவித்து, எங்கள் நீண்ட நாள் கனவை நினைவாக்கினர் CINE MUSICIANS TRUST APPROVAL, CHENNAI CORPORATION APPROVAL மிக விரைவில் வாங்கி தருவோம் என்று நாங்கள் அவரிடம் தெரிவித்தோம். மீண்டும் அவருக்கு
நாங்கள் மட்டும் அல்லாமல் 1223 உறுப்பினர்கள் சார்பாக எங்கள் பணிவான நன்றியை தெரிவித்து கொண்டோம்."  என்று குறிப்பிட்டுள்ளது.