அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை: சிஐடியு செளந்தரராஜன்

 
சிஐடியு செளந்தரராஜன்

இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த அழைப்பும் அரசிடம் இருந்து வரவில்லை சிஐடியு சங்க தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Image

15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை வழங்க  வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்  நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.போக்குவரத்துத்துறை இழப்பை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் 6 அம்ச  கோரிக்கை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்   காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது- சிஐடியு சவுந்தரராஜன்  திட்டவட்டம் | No buses ply after 12 midnight- CITU Soundararajan scheme

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு சங்க தலைவர் செளந்தரராஜன், “பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைத்தால் செல்ல தயாராக உள்ளோம். அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை. முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது. தாங்கள் முன்வைத்த எந்தகோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை...எந்தவித முன்னேற்றமும் இல்லை. மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேசி வருகிறார். சட்டப்படியான நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம். அனைத்து பேருந்துநிலையங்களிலும் பயணிகள்  கூட்டம் கூட்டமாக காத்திருக்கின்றனர். பழைய ஓய்வூதியம் உள்பட எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை” என்றார்.