ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை நிகழ்ச்சியில் வெடித்த மோதல்! கோவையில் பரபரப்பு
கோவையில் நடைபெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியில் மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு ஏற்பட்டது.
கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி பாட்டு பாட்டு கொண்டிருந்தபோது, அங்கு இருந்த மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு காவல்துறையினர் அங்கு வந்து கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை வெளியேற்றினர். மேலும் ஹிப்பாப் தமிழா இசை நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடுகள் மிகவும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி Concert-ல் மாணவர்களுக்கிடையே கைகலப்பு! #theinfocoimbatore #hiphoptamizha #Coimbatore #concert #Hiphop pic.twitter.com/qGj5IbAh5j
— the info coimbatore (@InfoCoimbatore) September 9, 2024
கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற இசை நிகழ்ச்சியில் அதிகம் கூடுவதால் பிரச்சனைகள் அதிகரித்து உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை போல 300 அடி ரேம்ப் அமைத்து ஹிப் ஹாப் தமிழா அதில் நடந்து வந்து பாட்டு பாடி நடனமாடியது குறிப்பிடத்தக்கது.