கோவையில் உருட்டுக்கட்டைகளுடன் கல்லூரிக்குள் புகுந்த வடமாநிலத்தவர்கள் - மாணவிகள் அலறல்

 
covai

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், வடமாநிலத்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வடமாநிலத்தவர்கள் கல்லூரிக்குள் உருட்டுகட்டைகளுடன் சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் வடமாநிலத்தவரிளின் பங்கு பெரிய அளவில் இருப்பதாக காவல்துறை தெரிவித்து வருகிறது. சமீபத்தில், திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தியதாக பகிரப்பட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்குள் வடமாநிலத்தவர்கள் உருட்டுகட்டைகளுடன் சென்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் சூலூரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கேண்டினில் தினமும் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உணவருந்தி வருகின்றனர். இந்த கேண்டினில் 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் உணவு பரிமாறுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்த தகராறில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனை கண்ட மாணவிகள் கேண்டினில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருதரப்பினர் இடையே சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில்,  வடமாநிலத்தொழிலாளர்கள் சிலர் உருட்டுக்கட்டைகளுடன் கல்லூரிக்குள் சென்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.