12ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை! குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்

 
வ்ம்

விழுப்புரம் அருகே ஆண் நண்பரை அடித்து போட்டுவிட்டு 12ஆம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும்,  பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது இன்று அன்றாட செய்தியாகி விட்டது.  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல்வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.  பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு.  பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கு

எதிர் வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுத்த நிறுத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு, பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்திட சட்ட திருத்தங்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

 விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி அடுத்த சிங்கமேடு இந்த பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பிளஸ் டூ வகுப்பு படித்து வருகிறார் வரும் மாணவி அதே பள்ளியில் படிக்கும் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றிருக்கிறார்.   அப்போது பைக்கில் அந்த வழியாக சென்ற மூன்று இளைஞர்கள் அந்த மாணவியின் ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். 

பின்னர் இருவரிடமும் இருந்த செல்போன்கள் மோதிரம் ஆகியவற்றை பிடுங்கிச் சென்றுள்ளார்கள்.  பாதிக்கப்பட்ட அந்த மாணவி வீடு திரும்பிய போது அவரை பார்த்து பதறிய உறவினர்கள் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்துகொண்டு மாணவியையும் தாக்குதலுக்கு உள்ளான அவரது நண்பரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மாணவியின் உறவினர்கள் அளித்த புகார் என்பதில் விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.  அந்த மூன்று பேர் பிடிக்க போலீசார்  10 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.