தீப திருவிழாவுக்கு குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்படும் தூய்மை பணியாளர்கள்

 
s s

செங்கத்தில் தீபம் திருவிழாவுக்கு தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்திலே அழைத்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகிவருகிறது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழாவை முன்னிட்டு தூய்மை பணி செய்வதற்காக பணியாளர்களை பாதுகாப்பாக பேருந்தில் அழைத்து செல்லாமல் குப்பை அல்லும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். தூய்மை பணியாளர்களும் மனிதர்கள் தான், குப்பைகள் இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அழைத்துச் சென்றவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.