திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் துப்பு கிடைத்தது.. கொள்ளையர்களை நெருங்கும் காவல்துறை..

 
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் துப்பு கிடைத்தது.. கொள்ளையர்களை நெருங்கும் காவல்துறை..

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம்களை உடைத்து 72 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்தவர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என்று  காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மணலூர்பேட்டை,  பண்டாரம்பட்டு சாலை மற்றும் போளூர் ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்த கொள்ளையர்கள் பணத்தை அள்ளிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இது தவிர கலசபாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரமும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  ஒரே இரவில் 4 கு ஏடிஎம்களிலிருந்து 72 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் துப்பு கிடைத்தது.. கொள்ளையர்களை நெருங்கும் காவல்துறை..

கொள்ளையர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளதாக நேற்று டிஜிபி சைலேந்திரபாபு கூறி இருந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்று இருப்பதால் அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.   இந்த நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருப்பது ஏறக்குறைய உறுதி  செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  கடந்த மூன்றாம் தேதி கர்நாடகாவில் கோலார் தங்க வயல் பகுதியில் இதே பாணியில் கொள்ளை நடைபெற்று இருப்பதால்,  இது ஹரியானா கொள்ளை கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் துப்பு கிடைத்தது.. கொள்ளையர்களை நெருங்கும் காவல்துறை..

காவல்துறைக்கு கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளும் ஒரே பாணிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்வதாக உள்ளன.  இதனை அடுத்து 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.  திருவண்ணாமலை முழுவதிலும் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  காவலர்கள் தமிழக எல்லையில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.  தனிப்படையினரின் உறுப்பினர் பிரிவு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மற்றொரு தனிப்படை பிரிவு ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளது.  காவல்துறைக்கு முக்கிய தடையம் கிடைத்துள்ளதாக்வும்,  திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் மிக விரைவில் சிக்குவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.