‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ் , குழந்தைகளுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர்..

 
 ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ் , குழந்தைகளுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர்..


'ஊட்டச்சத்தை உறுதி செய்'  திட்டத்தின் கீழ்  ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  

உதகை நகரின் 200வது ஆண்டு விழாவை  பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமிச்சர் மு.,க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார்.   அதன் ஒரு பகுதியாக   நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில்  ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ் , குழந்தைகளுக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர்..

 நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-ன் விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் ஒன்றுதான்  ஊட்டச்சத்து குறைபாட்டை களைய 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

mk Stalin biopic

அதனடிப்படையில், இன்று   'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற புதிய திட்டத்தின் கீழ்  சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்திருக்கிறார். இங்கு  கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய  6 வயதுக்கு உட்பட   குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ உதவி வழங்கவும்,  ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளை தனித்தனியாக பிரித்தும் அவர்களின்   ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்வதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தச் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமாத காலத்திற்கு நடைபெறுகிறது.