"வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்"- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

 
tn

வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

stalin
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், "இந்த அரசைப் பொறுத்த வரைக்கும் தொழில் வளர்ச்சி , சுற்றுச்சூழல் இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரண்டு தட்டுகள் போலவே கருதுகிறது.  இன்று புவி வெப்பமாதல் நாட்டு அளவில் அல்ல,  உலக அளவில் அதிகமாக பேசப்படுகிறது . இதற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வனப்பரப்பை அதிகப்படுத்துவது,  பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல ,வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.  சுற்றுச் சூழலை மனதில் வைத்துக்கொண்டு அப்போதே நாங்கள் மரக்கன்றுகள் எல்லாம் நட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.  அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த அரசு பொறுப்பேற்ற உடன் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை என்கின்ற பெயரை இதற்காக சுற்றினோம் . அத்துடன் நிற்காமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தோம்.  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நேர்மையான வெளிப்படையான அனுமதி முறைக்கு விட்டிருக்கிறோம்" என்றார்.
 

tn

தொடர்ந்து பேசிய அவர், "இப்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஒன்று சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.  இன்றைக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.  ஆகவே தொழில்,  சுற்றுச்சூழல் இரண்டுக்கும் சமுதாயத்தின் சம நண்பர்கள் என்ற அளவிலேயே முன்னெடுத்துச் ,செல்லவேண்டிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தொழில் துவங்க அனுமதிக்கப்படும் அனுமதிகளை, இன்னும் விரைவுபடுத்தும் ஆலோசனைகளை, நீங்கள் எல்லாம் இங்கே வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.  உங்கள் கருத்துக்களை அறிந்து கொஞ்ச நாள் அறிந்தகொள்ள நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்பதை மட்டும் என்னுடைய தொடக்க உரையாக சொல்லிக்கொண்டு முடித்துக் கொள்கிறேன் "என்று தெரிவித்துள்ளார்.