18 கோயில்களில் புதிய கட்டடங்களை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

 
tn

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோயில்களில் ரூ.105 கோடி மதிப்பீட்டிலான 25 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.105 கோடி மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் திருமண மண்டபங்கள், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, அன்னதானக் கூடம், முடிகாணிக்கை மண்டபம், காதுகுத்தும் மண்டபம், வணிக வளாகம், திருக்கோயில் பள்ளி, கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கலையரங்கம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மண்டல இணை ஆணையர் அலுவலகம், ஓதுவார் பயிற்சிப் பள்ளி போன்ற 25 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

tn

இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, 250 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்ததேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, மதுரை மாவட்டம், அழகர் கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபம், காதுகுத்தும் மண்டபம் மற்றும் முடிக்காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள்; மதுரை மாவட்டம், வேங்கடசமுத்திரம், அருள்மிகு காட்டுப் பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி;

stalin
சென்னை , அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் ரூ.9.84 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், முடி காணிக்கை மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிகள்; சென்னை , அருள்மிகு ஏகாம்பரரேசுவரர் திருக்கோயிலில் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டம், குற்றாலம், அருள்மிகு பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.1 கோடியே 87 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் நடைபாதை தளம் அமைக்கும் பணி; திருநெல்வேலி மாவட்டம், அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிக் கட்டடம் கட்டும் பணிகள்; என மொத்தம் ரூ.105 கோடி மதிப்பீட்டிலான திருக்கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.