‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட முதல்வர் ஸ்டாலின் ரூ.5 கோடி நிதி!!

 
mk Stalin biopic

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் ஆகியவற்றை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

mk stalin

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (21.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை. மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத்
தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும்,  மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார்.

stalin

 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி 

புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை  தமிழ்நாடு முதலமைச்சர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் -இடம்  வழங்கினார்.