முதல்வர் அதிரடி! சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி

 
mk

குளத்தை மையமாக வைத்து நடந்த சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.   சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் பகுதிகளில்  வண்ணான் குளம் வண்ணக் குளம் ஆகியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அமைந்திருக்கும்  வண்ணான்குளம் என்ற பெயரினை திருத்தம் செய்து வண்ண குளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   குறித்து சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டிருக்கிறது.   அதில்,   முதல்வர் தலைமையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வுக் கூட்டத்தில் சென்னை அம்பத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலம் வார்டு 82 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு 192ல்  அமைந்திருக்கும் குளத்தின் பெயரை திருத்தம் செய்து வண்ணக் குளம் என பெயர் மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

mks

 அதனடிப்படையில் அம்பத்தூர்,  சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள வண்ணான் குளம் என்ற பெயர் திருத்தம் செய்யப்பட்டு வண்ணக் குளம் என்ற புதிய பெயர் வைக்க சிறப்பு அதிகாரியின் மூலமாக மன்றத்தின் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.   தொடர்ந்து பெயர் மாற்றி புதிய பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு பொதுவாக இருக்கும் குளத்தின் பெயர் வண்ணான் குளம் என்று சாதி பெயரில் இருந்ததால்,  அதனால் ஏற்பட்ட சர்ச்சைகளும் சச்சரவுகளும் அதிகரித்துக் கொண்டே இருந்ததால்,  அது முதல்வரின் கவனத்திற்கு சென்றதால்,  வண்ண குளம்  என்று பெயரை மாற்றி இதனால் அம்பத்தூர், சோழிங்கநல்லூரில் நடந்து வந்த சாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்  முதல்வர் மு. க. ஸ்டாலின்.