கனமழையால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு பகுதிகளில் முதல்வர் ஆய்வு!!

 
dmk

கனமழையால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல்,  தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

dmk

கடந்த நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து, சென்னை ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி ,நாகப்பட்டினம் ,தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது . தமிழக முதல்வர் கடந்த 7ஆம் தேதி முதல் இது நாள் வரை இரவு பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று , சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி,  போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, அதன்படி பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து வருகிறார்.

dmk

தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும்,  தமிழக முதல்வர் அமைச்சர்கள் தலைமைச் செயலாளர் முதல் அனைத்து துறை செயலாளர்கள், அலுவலர்கள் ,பணியாளர்கள் என அனைவரும் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன், பணியாற்றி வருவதால் பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாலும், வெள்ள பாதிப்புகள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை கனமழை வெள்ளத்தால் ,பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் ,போரூர் ஏரி பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

dmk

தொடர்ந்து மௌலிவாக்கம் ,மாங்காடு சுரங்கப்பாதை பகுதியில் ,போரூர் ஏரியின் உபரி நீர் வாய்க்காலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வரத்தை பார்வையிட்டு ,ஆய்வு செய்தார்.  பரணிபுத்தூர் சாலை பகுதியில் மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி பொதுமக்களிடம், பாதிப்புகளின் விவரங்கள் மற்றும் தேவைகளை கண்டு கேட்டு அறிந்தார்.  இறுதியாக தனலட்சுமி நகர் பகுதியில் மழை வெள்ளத்தால்,  சூழப்பட்டு குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து,  பொதுமக்களிடம் பாதிப்புகள் விவரங்கள் குறித்து கேட்டறிந்து , அப்பகுதியில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.