"ஸ்டாலினும் - ஓபிஎஸ்ஸும் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்" - ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி!!

 
tn

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் அனுப்பி இருந்த நிலையில்,  அதற்கு சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று  அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் குண்டு கட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

rn

இதன் காரணமாக திமுக அரசை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். எடப்பாடி பழனிசாமி , ஜெயக்குமார் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.தடையை மீறி போராடிய எடப்பாடி பழனிசாமி தரப்பினரை கைது செய்து மகளிருக்கான இலவச பேருந்தில் காவல்துறையினர் அழைத்து சென்றனர்.   

tn

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் ஆலோசனைப்படி சபாநாயகர் செயல்படுகிறார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார்.  நேற்று சட்டமன்ற முடிந்த பிறகு ஸ்டாலினும் , ஓ .பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர் .அதிமுகவை சிதைக்க வேண்டும் உடைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது. ஓபிஎஸ்ஐ பி டீமாக வைத்து அதிமுகவை கட்டுப்படுத்த மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார்" என்றார்.