தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு. ஏற்கனவே பெண்களுக்கு ரூ.10,000 ஆண்களுக்கு ரூ.6,000 என வழங்கப்பட்ட நிலையில், அதை பல மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.


