விபத்துகளில் உயிரிழக்கும் பட்டாசு தொழிலாளர்கள் - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

 
stalin stalin

விபத்துகளில் உயிரிழக்கும் பட்டாசு தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கன்னிச்சேரிபுதூர் பட்டாசு ஆலையில் கள ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.  இந்த நிலையில், இன்று குமாரசாமி ராஜா நகரில் ₹77.12 கோடி மதிப்பீட்டில் 6  தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். புதியதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஆட்சியரை நாற்காலியில் அமர வைத்து வாழ்த்தினார். 

stalin

இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் ₹41 கோடி செலவில் மேம்படுத்தப்படும். காளிங்கபேரி, வெம்பக்கோட்டை அணைகள் மேம்படுத்தப்படும். அருப்புக்கோட்டையில் ₹350 கோடியில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கப்படும்.சிவகாசியில் ₹15 கோடி செலவில் நவீன கூட்டரங்கம் அமைக்கப்படும். விருதுநகரில் ₹25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும். பட்டாசுத் தொழிலாளர்கள் உயிரிழந்தால் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என கூறினார்.