டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
May 23, 2025, 14:07 IST1747989428287
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுதில்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுதில்லி வந்தடைந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, கழக மாநிலங்களவை குழுத் தலைவர் திரு. திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. ஆ.ராசா, திரு. ஜெகத்ரட்சகன், திரு. பி.வில்சன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி திரு. ஏ.கே.எஸ்.விஜயன், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் திரு. ஆஷிஷ் குமார், இ.ஆ.ப., ஆகியோர் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.


