திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி திருமாவளவனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளான் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் @thirumaofficial அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!#INDIA #UnitedWeStand pic.twitter.com/NZx9Vk0IA7
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023
இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், சாதிய - மதவாத - சனாதன சக்திகளுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் சமரசமற்ற போர்க்குரலை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி #INDIA-வை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் - செயல்பாடுகளும் வெல்லட்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.