முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 
mk stalin

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் 1931ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் பிறந்தார். வி.பி.சிங் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். இவர் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனிடையே இன்று அவருக்கு 92வது பிறந்தாள். இதனையொட்டி தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்தவருக்கு வீரவணக்கம்.  சமூக நீதிக்காக அச்சமின்றி போராடி இட ஒதுக்கீடு நமது உரிமை என்பதை வலியுறுத்த அனைவரையும் தைரியப்படுத்தியவர். இவ்வாறு குறிப்பிட்டார்.  


இதேபோல் திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று. சமூகநீதிப் பயணத்தில் தலைவர் கலைஞரின் கூட்டாளி. பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி ரீதியிலான முன்னேற்றங்களுக்கு விதையாக இருந்த மண்டல் ஆணையப் பரிந்துரைகளுக்கு உயிர்கொடுத்தவர்.  அரசியலமைப்புச் சட்டத்தையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் காக்கப் போராடி வரும் இந்தச் சோதனை மிகுந்த காலத்தில், அவரது சமூக அரசியல் பணிகள் நமக்கு எழுச்சியூட்டுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.