நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலன் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 
stalin stalin

நாகாலாந்து ஆளுநர்  இல.கணேசன் அவர்களின் அண்ணன் இல.கோபாலன் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நாகாலாந்து ஆளுநர் மாண்புமிகு திரு.இல.கணேசன் அவர்களின் அண்ணன் திரு.இல.கோபாலன் அவர்கள் இன்று (08-01-2025) காலை மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மாறாத பற்று கொண்ட திரு.இல.கணேசன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினால் அவரைப் போன்றே நானும் வருந்துகிறேன். உடன்பிறந்த அண்ணனை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.