காஞ்சிபுரத்தில் நீரில் மூழ்கி 2 சிறார்கள் பலி - முதலமைச்சர் ரூ.2 லட்சம் நிதியுதவி

 
stalin stalin

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை  அறிவித்துள்ளார்.  

காஞ்சிபுரம் மாவட்டம் வட்டம் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் விஜய்(வயது 7)  மற்றும் மகள் பூமிகா(வயது 4) ஆகிய இருவரும் கடந்த 14ம் தேதி நெல்வாய் ஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது எதிர்ப்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அந்த குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.  

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகள் விஜய் (வயது 7) மற்றும் பூமிகா (வயது 4) ஆகிய இருவரும் 17-4-2023 அன்று மாலை நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.  உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு. அவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.