சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் - முதலமைச்சர் அவசர ஆலோசனை

 
stalin

மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிறு, குறு நிறுவனங்கள், மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். அதன்படி இன்று மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

protest

இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படுமா என்பது தெரியவரும்.