சிஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

சென்னையில் சிஐஐ தென் இந்திய மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் சிஐஐ தென் இந்திய மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிசிசி தென் இந்திய மாநாட்டை  தொடங்கி வைத்தார். சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் மாநாட்டை தொடங்கி வைத்தார். 

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது 
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என கூறினார்.