பேராசிரியர் அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin stalin

சென்னை வளசரவாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேராசிரியர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் பேராசிரியர் அரங்கம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில், இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதனையடுத்து பேராசிரியர் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

பேராசிரியர் அரங்கம் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.