11 புதிய அரசு கலைக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 11 அரசு கலைக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
உயர்கல்வித் துறை சார்பில், தமிழ்நாட்டில் புதிதாக 11 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம், ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
புதியதாக அமைக்கப்பட்ட 11 அரசு கலைக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கல்லூரிகளை துவக்கி வைத்தார். இந்த 11 கல்லூரிகளிலும் இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


