அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல் கலாமின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

 
stalin

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் திருவுருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரின் நினைவாக அவரது முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது நினைவு நாளான இன்று அந்த சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அப்துல் கலாமின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். 



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெருமைமிகு அரசு பள்ளியில் பயின்று தனது அறிவுத்திறத்தால் நாட்டின் முதல் குடிமகனான அறிவியலாளர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், அவர் பயின்று - பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன். படித்து முன்னேறும் இந்த இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கை, அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றும்! அறிவியல் பார்வையோடு உலக அரங்கில் #INDIA சிறந்து விளங்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.