ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin stalin

ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான முடிவுற்ற 599 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் இரண்டு நாள்கள் கள ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான முடிவுற்ற 599 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இதேபோல் மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தந்தை பெரியாரை கொடுத்த மண் ஈரோடு. கேரள மக்கள் திராவிட மாடல் அரசை பாராட்ட காரணம் பெரியார் போட்ட அடித்தளமே காரணம். ஈரோடு மக்களாகிய உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆனால் ஒரு சோகம் என்னுள் இருக்கிறது, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு அஞ்சலி.

அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறையில் ரூ.100 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்; ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும் பவானி சங்கமேஸ்வரர் கோயில் உள்பட 3 கோயில்களில் பக்தர்களுக்கு வசதி செய்து தரப்படும். மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் ரூ.15 கோடி செலவில் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும். ஈரோட்டில் விரைவில் ஐடி பார்க் அமைக்கப்படும், திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் விரைவில் மணிமண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சின்தடிக் ஓடுதளபாதையுடன் கூடிய கால்பந்து மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.