ஏ.வி.எம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
MK Stalin

சென்னை வடபழனியில் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

இந்தியாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் வடபழனியில் அமைந்துள்ளது. இந்த ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளது. ஆனால் ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் சமீபகாலமாக திரைப்படத் தயாரிப்பிலிருந்து விலகியுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ்ராக்கர்ஸ்’ என்ற வெப் தொடரை  தயாரித்திருந்தது. ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு பகுதி இப்போது புதுப்பிக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.

mk stalin

இந்த நிலையில் ஸ்டூடியோவின் 3வது அரங்கில், ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ஹெரிடேஜ் அருங்காட்சியமாக  மாற்றப்பட்டுள்ளது. இதில் முந்தைய காலகட்டங்களில் பயன்படுத்தபட்ட அரிய கேமராக்கள், பழங்கால கார்கள், சினிமா உபகரணங்கள், புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன். இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.