கலைஞர் கோட்டம் நாளை திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

 
Kalaignar Kottam

திரூவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதன் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. 
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை நாளை திறந்து வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், திரூவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை நாளை திறந்து வைக்க உள்ள நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். இதேபோல் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார்.