கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

மேட்டூர் அணையில் இருந்து 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நீர் வழித்தடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தஞ்சைக்கு வருகை தந்தார். அப்போது முதலமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காவிரி படுக்கையில் தூர் வாரும் பணிகள் தொடர்பாக ஆய்வுக்கு செல்லும் முன் அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் , ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பாக முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் காவிரி தண்ணீர் செல்லும் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். 

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திருச்சி லால்குடி அருகே செங்கரையூர் கூழையாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  ரூ.23 லட்சம் மதிப்பில் சுமார் 15கி.மீ. தூரத்திற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.