தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் தொழிற்சாலை அமையவுள்ளது. கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கடந்த ஜனவரி மாதம் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.