வேலூரில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்கா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

 
mk Stalin

வேலூர் மாவட்டத்தில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்கா கட்டிடத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 

தகவல் தொழில் நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதில் முதற்கட்டமாக விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வேலூரில் மினி டைடல் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொடு காணொலி வாயிலாக மினி டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் பரப்பளவில் 30 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது.